Monday 7 June 2010

Super Star about Singam

கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் அடிக்கடி நலம் விசாரிக்கும் நபர்களில் இயக்குனர் ஹரியும் ஒருவர். சூப்பர் ஸ்டார் அன்பு வைத்திருக்கும் நபர்களில் ஒருவர் ஹரி. தவிர அவரது நெருங்கிய நண்பர் விஜயகுமாரின் மாப்பிள்ளை வேறாயிற்றே ஹரி.

‘சிங்கம்’ ரிலீசான இரண்டாவது நாளில் இயக்குனர் ஹரியை தொடர்பு கொண்ட சூப்பர் ஸ்டார், “படத்தை பத்தி நல்லா பாசிட்டிவான ரிசல்ட் வந்துகிட்டுருக்குன்னு கேள்விப்பட்டேன். படத்தை பார்த்துட்டு உங்க கிட்டே பேசுறேன் ஹரி” என்று கூற, உற்சாகத்தில் மிதக்கிராராம் ஹரி. (நீங்கள் இதை படிக்கும் நேரம், சூப்பர் ஸ்டார் சிங்கத்தின் ஸ்பெஷல் ப்ரீவ்யூவை பார்த்திருக்க கூடும்!)


இந்த கோடையின் சூப்பர் ஹிட் படமாக ஆகியிருக்கிறது சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சிங்கம். வெளியிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக சக்கை போடு போட்டுகொண்டிருக்கிறது சிங்கம். (இந்த WEEK END நான் போகலாம்னு இருக்கேங்க!). இடையே வெளியிட்ட படங்களின் ரிசல்ட்டால் சங்கடத்தில் நெளிந்த சன் பிக்ச்சர்சை தலை நிமிர வைத்திருக்கிறது இப்படம் என்றால் மிகையாகாகது. தவிர சூர்யாவையும் சில படிகள் மேலே ஏற்றியிருக்கிறது இப்படம்.

படத்துக்கு படம் உடலை வருத்தி, கெட்டப்பை மாற்றி வித்தியாசம் காட்டி வருகிறார் சூர்யா. இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக அசத்தியிருக்கிறார் சூர்யா.

“மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தான் இன்ஸ்பிரேஷன்” – சூர்யா

‘காக்க காக்க’ படத்தில் ஒரு HI-PROFILE ஐ.பி.எஸ். அதிகாரியாக அசத்தி சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற சூர்யா, இதில் லோக்கல் சப்-இன்ஸ்பெக்டராக பட்டையை கிளப்பியிருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ரஜினி சாரின் மறக்க முடியாத ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று கூறுகிறார் சூர்யா.

சூர்யாவின் உழைப்பு வீண்போகவில்லை. பல திரையரங்குகளில் சிங்கத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள் சூர்யா!

(கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறப் பாரு; இஷ்டப்பட்டு எல்லாரும் உன் பின்னால் வருவான்!!)

No comments: